எனக்கு அப்பா எனும் அந்தஸ்தை தந்த என் மகனை பற்றியும் அவன் செய்யும் குறும்பு பற்றியும் இந்த பதிவில் காண்போம்.

இவன் தான் என் மகன்.பெயர் முகேஷ்.என்னடா இவன் தன் மகனுக்கு முகேஷ் என்று பெயர் வைத்துள்ளான் என்று பார்க்கிறீர்களா, நானும் வருங்காலதில் அம்பானி ஆக ஆகணும் என்ற கனவு தான்.
13/05/2008 அன்று தான் என் மகன் எனக்கு அளித்த பட்டம் "அப்பா".ஆனால் சந்தோசபடும் மனநிலையில் நான் இல்லை.ஏன் என்றால் எனக்கு மகன் என்ற பட்டத்தை கொடுத்த என் தாய் மற்றொரு மருத்துவமனையில் இதே நாளில் வாழ்வா சாவா என்ற நிலையில்.
பிறக்கும் போது அவன் அழுதானோ இல்லையோ என்று எனக்கு தெரியாது ஆனால் நான்,என் தந்தை மற்றும் என் தம்பி அன்று முழுவதும் அழுது கொண்டுதான் இருந்தோம்.
என் மகன் பிறந்து 5 மணி நேரம் கழித்து தான் நானும் என் குடும்பத்தாரும் அவனை பார்க்க மருத்துவமனைக்கு சென்றோம்.
அவன் செய்யும் குறும்புகளை பற்றி இனி பாப்போம்.............
என் தந்தை முகேஷ் ஜாதகத்தை ஒரு ப்ரோகிதரிடம் கொண்டு சென்று திரும்பி வந்து சொன்னார் என்னவென்றால், இவனை யாராலும் அடக்க முடியாது,இவன் பேச்சை தான் நீங்கள் கேட்க வேண்டும் உங்கள் பேச்சை இவன் கேட்கமாட்டான் என்றும்.மேலும் இவன் வரும்காலத்தில் அரசியல்வாதியாக வருவான் என்றும் சொன்னார். நான் இதை நம்பவில்லை அனால் இவன் செய்யும் அமர்கலத்தை பார்க்கும் பொது அது உண்மை தான் என்று தோனுகிறது.
என் பாட்டி அடிக்கடி சொல்வார்கள் நான் சிறு வயதில் மிகவும் குறும்பு செய்வேன் என்று.அப்போதெல்லாம் எனக்கு தெரியாது அனால் என் மகன் என்னை மாதிரியே தான் குறும்பு செய்கிறான் என்று சொல்லும் போது தான் தெரிகிறது நான் எந்த அளவுக்கு அமர்க்களம் செய்திருப்பேன் என்று.
எங்கள் குல தெய்வத்திற்காக மொட்டை அடிபதற்கு முன் எடுத்த புகைப்படம்:
மொட்டை அடித்த பின் எடுத்த புகைப்படம்:
வேட்டைகாரன் தொப்பியோடு :
யானையில் தூங்கும் போது :
சைக்கிள் ஓட்டும் போது :
கிருஷ்ணன் கொண்டையுடன் :
அடுத்து என் இரண்டாவது குழந்தை பற்றிய பதிவை எதிர்பார்க்கலாம்.அடுத்து என்றால் உடனே என்று பொருள் அல்ல.இப்பொழுதான் முகேஷ் வயது இரண்டு ஆகிறது.அடுத்த குழந்தைக்கு ரெடி பண்ண இன்னும் ஒரு வருடமாவது ஆகும் அல்லவா.அதுவரை ஒன்னும் பன்னமுடியதுனு சொல்ல வந்தேன்.. என்ன ரொம்ப பேசுறேனோ .சரி வரேன்.
நீங்கள் எங்கு போகிறீர்கள்? ஒழுங்கா உங்கள் கருத்துகளை போட்டுட்டு போங்க.....